யாழ்.இந்துவிற்கும் கொழும்பு இந்துவிற்கும் இடையிலான 11ஆவது இந்துக்களின் போர் (நேரலை)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 11ஆவது இந்துக்களின் போர் நேற்றய தினம் ஆரம்பித்துள்ளது.
நேற்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நேற்றை ஆட்டத்தின் முடிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மொத்த விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி 28 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியான ஆட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
டிவி லங்காவில் 9, 10 அலைவரிசைகளிலும் PEO TVல் 105 அலைவரிசையிலும் இந்துக்களின் போர் துடுப்பாட்டத்தை கண்டு களியுங்கள்.