வைத்தியசாலைகள் தான் கொரோனா தொற்றுக்கு காரணமா? வைத்தியர் விளக்கம்!
யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா விடுதியில் தற்போது தினமும் சிகிச்சையளிக்கப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 80 வீதமாக காணப்படுகின்றது என யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது குடாநாட்டில் கோவிட் தொற்று சமூக மட்டத்தில் பரவிக் காணப்படலாம். எழுந்தமானமான சமூகமட்ட பரிசோதனைகளிலும் வைத்தியசாலைக்கு வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிலும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே கொவிட் நோயாளிகள் இனம் காணப்படுகின்றனர்.
இதனால் வைத்தியசாலை தான் கொவிட் தொற்றுக்கு உரிய இடம் எனத் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பது தவறு. உண்மையில் வைத்தியசாலையில் கொவிட் தொற்று நோயாளர்கள் மூலம் ஏனையவர்களுக்கு தொற்றுப் பரவாது.
முற்காப்புகளுடனேயே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கொவிட் தொற்றினால் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் 34% சலரோக நோயாளிகளாகவும், 20% கற்பிணித் தாய்மார்களாகவும் உள்ளனர். 5% சிறுபிள்ளைகளாக உள்ளனர்.
சிகிச்சை பெறும் கொவிட் நோயாளிகளில் 25% ஆனோருக்கு சுவாசிப்பதற்கு ஒட்சிசன் தேவைப்படுகின்றது.
இங்குள்ள கொவிட் நோயாளிகளின் மரணவீதம் 1.2% ஆக உள்ளது எனவும் தெரிவிவத்துள்ளார்.