யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி
யாழ்.போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதிவை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (27) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை வைத்திய அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளதால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர்கள் சங்கத்தின் குறித்த போராட்டத்தினால் வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் பலவும் இயங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும் நோயாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
