யாழ் மற்றும் திருகோணமலையில் அரசிற்கு எதிராக சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு!
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளில் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை 7 மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலை ஆகியவற்றில் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப் புறக்கணிப்பு
மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல், மின் கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் வைத்தியசாலை ஊழியர்களினால் போராட்டம்
அதேசமயம், மின்சாரம் கட்டணம் அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தளாய் தள வைத்தியசாலை ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(23) முன்னெடுக்கப்பட்டது.
மின் கட்டணத்தை குறை,மக்களை துன்புறுத்தாதே,மக்களை வீதிக்கு இறக்காதே,மற்றும் மேலதிக நேர கொடுப்பனவை வழங்கு சுற்றுநிருபங்களை இரத்துச் செய்,போன்ற வாசகங்களை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தார்கள்.
