சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீள்கின்றது மருத்துவமனை விசாரணை

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka
By Shadhu Shanker Sep 07, 2023 07:12 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

மேலும் நால்வரிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். வாக்குமூலம் பெறப்பட்டவர்களில் பணிப்பாளரும், சிறுமி சிகிச்சை பெற்ற விடுதியில் கடமையில் இருந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

jaffna little girl

8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்!! யாழில் வெடித்த போராட்டம்

8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்!! யாழில் வெடித்த போராட்டம்

பின்னணி 

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய தகவல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய தகவல்

சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா தவறாக பொருத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

jaffna little girl issue

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவமனைகளில் மருத்துவத் தவறுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

அவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தபோதும், விசாரணை அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விசாரணைகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

அதற்குச் சமாந்தரமாக பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதுவரை மருத்துவமனைப் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் காவல்துறையினரால் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீள்கின்றது மருத்துவமனை விசாரணை | Jaffna Hospital The Issue Of The Girl

மேலும் 4 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைகள் இன்னமும் நிறைவடையவில்லை.

மூன்று நாட்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், விசாரணைக்கு இன்னமும் இரு நாட்கள் தேவை என்றும் மருத்துவமனைத் தரப்புக்களிடம் அறியமுடிந்தது.

சிக்கல் நிலைமை

விடுதியில் கடமையில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளபோதும், அவற்றின் மூலம் எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியாதுள்ளது என்றும், காரணங்களே கூறப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தரப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு

இன்றைய நாடாளுமன்ற அமர்வு

அத்துடன், விடுதியில் கடமையிலிருந்த அனைவரது வாக்குமூலங்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன என்று காவல்துறை தரப்புக்களில் இருந்து அறியமுடிந்தாலும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீள்கின்றது மருத்துவமனை விசாரணை | Jaffna Hospital The Issue Of The Girl

மருத்துவம் சார்ந்த தவறை மருத்துவத் துறையினரே இனங்கான முடியும் என்ற நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கை கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்ற நிலைமையிலேயே காவல்துறை தரப்பு உள்ளது.

ஆயினும் இன்னமும் மருத்துவமனை விசாரணைக்குழுவின் விசாரணை முழுமைப்படுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்டோர் கருத்து

விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக் கோரிக்கையாக உள்ளது.

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீள்கின்றது மருத்துவமனை விசாரணை | Jaffna Hospital The Issue Of The Girl

விசாரணைகளைக் காலம் தாழ்த்தி இழுத்தடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமிக்கு நடந்த சம்பவம் கண் முன்னே நடந்தது என்ற நிலையில், எவரும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விசாரணைகள் நீதியான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வழக்கு இன்று

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீள்கின்றது மருத்துவமனை விசாரணை | Jaffna Hospital The Issue Of The Girl

சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

சிறுமியின் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவக் குறிப்பேடு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.     

பிள்ளையானுக்காக அனுதாப வாக்குச் சேகரித்தவர்களும் பதில் கூற வேண்டும் - எழுந்துள்ள கண்டங்கள்

பிள்ளையானுக்காக அனுதாப வாக்குச் சேகரித்தவர்களும் பதில் கூற வேண்டும் - எழுந்துள்ள கண்டங்கள்

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025