நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிய டொக்டரை சுட்டுக்கொன்றார்கள்!

Sri Lanka Army Sri Lanka India Indian Army Indian Peace Keeping Force
By Niraj David Feb 21, 2024 09:19 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

இரவு கடந்து போய் காலையாகிவிட்டது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாதசுந்தரம் மூன்று தாதிமாருடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.

“தாங்கள் யார் என்று அடையாளம் காண்பித்துக் கொண்டு இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்துவிடுவது உசிதமானது என்று கூடவந்த தாதிமாரிடம் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.

கைகளை மேலே தூக்கிக்கொண்டு “நாங்கள் சரணடைகின்றோம்…. நாங்கள் ஒன்றுமே அறியாத டாக்டர்களும், நர்சுகளும்தான்..என்று உரத்துக்கூறிபடி அவர்கள் நடந்து வந்தார்கள்.

டாக்டர் சிவபாதசுந்தரம் தமக்கு அருகில் வரும் வரை இந்தியப் படையினர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியப் படையினரை நோக்கி நம்பிக்கையோடு சென்றார்.

நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிய டொக்டரை சுட்டுக்கொன்றார்கள்! | Jaffna Indian Army Ltte War Ltte Leader Hindi Army

இந்தியப் படையினரை டாக்டர் நெருங்கியதும், அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே டாக்டர் சிவபாதசுந்தரம் துடிதுடித்து இறந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த நார்சுகள் படுகாயமடைந்தார்கள். மருத்துவமனையில் சிக்கிவிட்ட குழந்தைகளையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த உன்னதரான மனிதர் டாக்டர் சிவபாதசுந்தரம் இரத்தத்தில் மிதந்தார்.

உயிர் பிழைத்தவர்கள் பிணங்களைப் போன்று நடித்து மறுநாள் 11மணிவரை பிணங்களின் நடுவில் கிடந்தார்கள். இதேபோன்று மற்றொரு மருத்தவரான டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு புறம் பிணமாகக் கிடந்தார்.இவ்வாறு அந்த வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தர்.

இந்திய அதிகாரியின் வருகை

அங்கிருந்த வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்திய படையினருக்கு யார்-எவர் என்ற அக்கறை இல்லை. கண்களில் பட்டவர்களெல்லாம் எதிரிகளாகவே தெரிந்தார்கள்.

சுட்டுத் தள்ளத் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில் என்ன செய்வது என்று எவருக்குமே புரியவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் மறுநாள் காலை, அதாவது 22ம் திகதி நண்பகலளவில் ஒரு இந்திய உயரதிகாரி யாழ் வைத்தியசாலையினுள் விஜயத்தை மேற்கொண்டார்.

நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிய டொக்டரை சுட்டுக்கொன்றார்கள்! | Jaffna Indian Army Ltte War Ltte Leader Hindi Army

அவர் வந்த தோரணை, மற்றய சிப்பாய்கள் அந்த அதிகாரிக்கு வழங்கிய மரியாதை, ஹிந்தி மொழியில் அவர் மேற்கொண்ட மிரட்டல்கள், இவை அனைத்தையுமே பிணங்கள் போன்று தரையில் கிடந்த வைத்தியர் ஒருவர் அவதானித்தார்.

நடைபெற்ற சம்பங்கள் பற்றி அங்கு நின்ற சிப்பாய்களிடம் அந்த அதிகாரி கேள்வி கேட்பது புரிந்தது. நடைபெற்ற சம்பவங்களில் அந்த அதிகாரி திருப்தி அடையவில்லை என்பதும் அந்த அதிகாரியின் பேச்சு தொணியில் இருந்து புரிந்தது. அந்த அதிகாரி விரைவில் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார் போன்றே நிலமை காணப்பட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பாத ஒரு வைத்திய அதிகாரி திடீரென்று எழுந்து அந்த இராணுவ அதிகாரியிடம் தங்களின் நிலை பற்றி அழுதபடி தெரிவித்தார்.

என்ன நினைத்தாரோ அந்த அதிகாரி, அந்த வைத்தியரின் பேச்சை நிதானத்துடன் செவிமடுத்தார். எதற்கும் பயப்படவேண்டாம் என்று வைத்தியரை அசுவாசப்படுத்திய அந்த இராணுவ அதிகாரி, வைத்தியசாலையில் இருந்த மற்றவர்களை அழைக்கும்படி கூறினார்.

இந்தியப் படையினர்

அந்த வைத்திய அதிகாரியும், வைத்தியசாலையின் பல இடங்களிலும் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு மறைந்திருந்த மற்றவர்களை வெளியில் வரும்படி கூவி அழைத்தார்.

பிணங்களின் மத்தியில் இருந்தும், பூட்டிய அலுமாரிகளின் உள்ளிருந்தும், கூரைகளின் மறைவில் இருந்தும், பழைய பொருட்கள் வைக்கும் இடங்களில் இருந்தும் பலர் அங்குவந்து சேர்ந்தார்கள்.

நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிய டொக்டரை சுட்டுக்கொன்றார்கள்! | Jaffna Indian Army Ltte War Ltte Leader Hindi Army

அதன்பின்னரே அவர்களுக்கு உயிர் வந்தது. உயிர் வந்தது என்று கூறுவதைவிட உயிர் பிச்சை கிடைத்தது என்று கூறுவது பொறுத்தமாக இருக்கும். அந்த உயிர்ப்பிச்சை இந்தியப் படையினரிடம் இருந்து கிடைக்கவில்லை.

முதல் நாள் இரவு முவதும் அவர்கள் வழிபட்ட கடவுளிடம் இருந்துதான் கிடைத்தது. அங்கு திரண்டுவந்த வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்களைப் பார்த்து அந்த இந்திய அதிகாரி ஒரு கேள்வியைக் கேட்டார். “எதற்காக புலிகளை வைத்தியசாலையினுள் மறைத்து வைத்தீர்கள்? அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

அந்த இராணுவ அதிகாரி அடுத்துக் கூறிய வசனம் அவர்களை மேலும் ஆச்சரியமடைய வைத்தது.“இங்கே பாருங்கள் எத்தனை புலிகளை எங்களது படைவீரர்கள் இங்கே சுட்டு வீழ்த்தியிருக்கின்றார்கள்? “மருத்துமனை போன்ற ஒரு இடத்தை யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா?அங்கிருந்த வைத்திய சாலை ஊழியர்களுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. ஆடிப்போய்விட்டார்கள்.

புலிகளை தாங்கள் மருத்துமனைக்குள் ஒளித்து வைத்திருந்தது போலவும், அதனால்தான் இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்து அந்தப் புலிகளை எல்லாம் அழித்துவிட்டது போலவும் அந்த அதிகாரி கூறுவதையும், அதற்கு காரணமாக அங்கிருந்த வைத்தியசாலை அதிகாரிகளையும், ஊழியர்களையும் குற்றம் சுமத்துவதையும் – அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலை. அங்கு வெள்ளை ஆடைகளுடனும், ஸ்தெதஸ் கோப்புக்களுடனும், வீழ்ந்து கிடக்கும் வைத்தியசேவை ஊழியர்கள் எல்லாம் புலிகளா? அந்த இடம் பூராவும் உடல் சிதறிப் பலியாகியிருந்த தலை நரைத்த வயோதிபர்கள், சேலை அணிந்த பெண்மணிகள், குழந்தைகள் அனைவருமே புலிகளா? கதறி அழவேண்டும் போலிருந்தது.

அந்த இந்தியப் படை அதிகாரியின் சட்டையை பிடித்து இழுத்து, இந்தக் கேள்விகளையெல்லாம் அவரது மண்டையில் உறைப்பது போன்று கேட்கவேண்டும் போல் இருந்தது.

புலிகள் வைத்திய சாலைக்குள்

ஆனால் அவர்களது உயிர்கள் அந்தக் கணத்தில் அந்த இந்திய அதிகாரியின் கருணையிலேயே தங்கியிருந்தது. அவர்கள் எதுவும் பேசவில்லை.

தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி மௌனமாக நின்றார்கள். தன்னை ஒருவாறு அசுவாசப்படுத்திக் கொண்ட ஒரு வைத்திய அதிகாரி, துணிவை வரவழைத்துக் கொண்டு மிகவும் பணிவான குரலில் கூறினார்.

நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிய டொக்டரை சுட்டுக்கொன்றார்கள்! | Jaffna Indian Army Ltte War Ltte Leader Hindi Army

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்த போது உண்மையிலேயே இங்கு புலிகள் எவரும் இருக்கவில்லை.

வைத்தியசாலை வளாகத்தினுள் இருந்து எங்கள் அறிவுக்கெட்டியவரை புலிகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்ததாகத் தெரியவில்லை.அந்த வைத்திய அதிகாரியைத் தொடர்ந்து வேறு சிலரும் புலிகள் வைத்திய சாலைக்குள் இருக்கவில்லை என்பதை இந்திய அதிகாரியிடம் தெரிவித்தார்கள்.

அமைதியாக அவற்றைச் செவிமடுத்த அந்த இந்தியப் படை அதிகாரி, அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.

அப்படியென்றால் நான் பொய் கூறுகின்றேனா? நான் என்ன பொய்யனா? அந்த இந்தியப்படை அதிகாரியின் கண்கள் சிவந்து காணப்பட்டன.

அவலங்கள் தொடரும்…. 

யாழ் வைத்தியசாலையில் நடந்த படுகொலைகள்

யாழ் வைத்தியசாலையில் நடந்த படுகொலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், இணுவில், கொழும்பு, Markham, Canada

24 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில், London, United Kingdom

25 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Idar-Oberstein, Germany

21 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், கனடா, Canada

25 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

25 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

நீர்வேலி, Aurora, Canada

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மொரட்டுவா

23 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023