யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

Jaffna Sri Lanka Airport Tourism Jaffna International Airport Airport & Aviation Services
By Independent Writer Feb 09, 2026 09:46 AM GMT
Report

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அதிக்கையில், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (2025 மற்றும் முந்தைய ஆண்டுகள்) பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்த விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

 சாதனை படைத்துள்ளது

2019-2023 காலப்பகுதியின் வருகையாளர்களின் மொத்த எண்ணிக்கையை விட 2025 ஆண்டில் சுமார் 33,431 வருகையாளர் அதிகமாகும். அத்துடன் சர்வதேச விமான இயக்கங்கள் 1,138 ஆகும். இது ஒரு புதிய உச்சமாகும். தினசரி 7 விமானங்கள் செயல்பாட்டு சாதனை படைத்துள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை | Jaffna International Airport Records Historic Year

இது 2026 ஜனவரியில் எட்டப்பட்டது. இதில் 2 சர்வதேச மற்றும் 5 உள்நாட்டு விமானங்கள் உள்ளடங்கும். முனைய விரிவாக்கத் திட்டமானது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 700 மில்லியன் ரூபா செலவிலான விரிவாக்கத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இது ATR ரக விமானங்களில் இருந்து Airbus A320 போன்ற பெரிய விமானங்களைக் கையாளும் வகையில் முனையத்தின் கொள்ளளவை மேம்படுத்தும்.

முதல் முறையாக மலேசியா, ஹைதராபாத் மற்றும் சென்னையில் இருந்து சர்வதேச விமானங்களை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் வரவேற்றது.

யாழ்ப்பாண நுழைவாயில்

ஹைதராபாத்திலிருந்து முதலாவது சர்வதேச மருத்துவ வெளியேற்ற (MEDEVAC) விமானச் சேவையை வெற்றிகரமாக கையாண்டு, அவசரச் சேவைகளுக்கான தனது தயார்நிலையை உறுதிப்படுத்தியது. 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு, அமெரிக்க விமானப்படை மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஊடாக நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்கான மூலோபாய மையமாக செயற்பட்டது.

யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை | Jaffna International Airport Records Historic Year

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் இந்த வளர்ச்சி, 2025 இல் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் (AASL) 19.06 பில்லியன் ரூபா இலாபத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளது.

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம், 2026 ஆம் ஆண்டளவில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இது நேரடியாக உதவியுள்ளது.

இந்த வரலாற்று மைல்கல் எமது விமான நிலைய ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கும், சர்வதேச விமான நிறுவனங்கள் யாழ்ப்பாண நுழைவாயில் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குமான சான்றாகும் என யாழ்ப்பாணம் (JIA ) சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் தொடர்ந்து உயர்வடையும் தங்க விலை

இலங்கையில் தொடர்ந்து உயர்வடையும் தங்க விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019