யாழின் சாபக்கேடான காக்கைதீவு : நாற்றத்தோடு நகரும் சுற்றுலா நகரம்
யாழ்ப்பாணத்தில் யாருமே திரும்பிப் பார்க்க விரும்பாத, ஆனால் கடந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு வீதி இருக்கிறது. அதுதான் காக்கைதீவு வீதி .
ஒரு பக்கம் யாழ் மாநகர சபை, மறுபக்கம் பிரதேச சபை. இரண்டுக்கும் சொந்தமான குப்பை கிடங்குகள் இங்கே முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இங்கே பிரச்சினை என்னவென்றால் குப்பைகள் கிடங்கில் இருப்பதை விட, வீதியில்தான் அதிகம் கிடக்கின்றன.
இதனால் நாளாந்தம் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்களும் அயற் கிராமங்களில் வசிப்பவர்களும் சொல்லெண்ணா துயரத்தை அனுபவிக்கின்றனர்.
இது இரண்டு நிர்வாகங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகத்தின் கதை. பொறுப்பின்மைக்கும், அலட்சியத்திற்கும் நடுவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மக்களின் கதை.
இந்த நாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன... மக்களின் வலி என்ன... இதற்கான தீர்வுதான் என்ன... என்பது குறித்து ஆராய்கின்றது கீழுள்ள காணொளி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |