யாழ்ப்பாணம் வலிவடக்கில் காணி விடுவிப்பு : அமைச்சர் டக்ளஸின் நம்பிக்கை
இலங்கையின் கடந்த கால அரசியல் காரணிகளால் வலிகாமம் வடக்கு காணிவிடுவிப்பு தாமதமாகியதாக குறிப்பிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுவிக்கப்படாது உள்ள ஏனைய காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலிகாமம் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமிருந்த ஒருதொகுதி காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட காணி நிலங்களின்
விடுவிக்கப்பட்ட காணி நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களை அழைத்து அவர்களின் எண்ணப்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று(27) இடம்பெற்றது.
இதன் போது மக்கள் ஏனைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும், மக்கள் மீளக்குடியமர ஏதுவான வசதிகள் செய்யப்பட வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |