யாழ் நகரில் திருட்டு போன மோட்டார் சைக்கிள்: உதிரிப்பாகங்களாக மீட்ட காவல்துறையினர்(படங்கள்)
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Northern Province of Sri Lanka
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    யாழ்ப்பாண நகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழப்பாணம் செல்வா திரையரங்கு முன்பகுதியில் கடந்த (29)ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுவிட்டதாக யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குற்ற விசாரணை பிரிவு
குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 
                                        
                                                                                                                         
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        