அபாண்டமான பழி சுமத்தும் யாழ்.மாநகர சபை - வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் காட்டம்!

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kalaimathy Mar 01, 2023 12:54 PM GMT
Report

யாழ்ப்பாண மாநகர சபை குழப்பங்கள் செய்திகளாக வெளிவர தொடங்கியதும், அதனை திசை திருப்பவே வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் வரி செலுத்த வில்லை என எம் மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் கு. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வேளை ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த வருடங்களில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிகளின் போது, மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்தவில்லை என சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம். நாம் செலுத்த வேண்டிய பணம் என எமக்கு உத்தியோகபூர்வமாக 17ஆம் திகதியே அறிவித்தனர்.

பழி சுமத்தும் மாநகர சபை

அபாண்டமான பழி சுமத்தும் யாழ்.மாநகர சபை - வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் காட்டம்! | Jaffna Municipal Council International Trade Fair

ஆனால் 15ஆம் திகதி நாம் பணம் செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி இருந்தன. எமக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்காமல் எம்மால் எவ்வாறு பணத்தினை செலுத்த முடியும்? கடந்த காலங்களில் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் மாநகர சபை இருந்த வேளைகளில் நாம் வரி சலுகைகளை பெற்றுக்கொண்டோம்.

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே வரி சலுகைகளை கேட்டிருந்தோம். மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளுக்கு சபை சென்ற பின்னர் நாம் வரி சலுகைகளை கோரிய போது சபை அனுமதி பெற வேண்டும் என்றும் சபையில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் காலம் தாழ்த்தி பதில்களும் அளித்தனர்.

நாம் மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை என வெளியான செய்திகள் தொடர்பில் ஆராய்ந்த போது, மாநகர சபையின் சில உறுப்பினர்கள் தமது அரசியல் சுய இலாபத்திற்காகவும், மாநகர சபையில் அண்மைக்காலமாக காணப்படும் குழப்ப நிலைமைகள் தொடர்பிலான செய்திகளை திசை திருப்பவுமே எம் மீது பழி சுமத்தி செய்திகளை வெளிவர செய்துள்ளதாக அறிந்து கொண்டோம்.

அனைத்திற்கும் கட்டணம்

அபாண்டமான பழி சுமத்தும் யாழ்.மாநகர சபை - வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் காட்டம்! | Jaffna Municipal Council International Trade Fair

நீண்ட காலமாக நாம் மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை என எம் மீது குற்றம் சுமத்துபவர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய பணத்தினை நாம் கொடுக்காது இருந்தால், எம் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இருக்கலாமே ஏன் எடுக்கவில்லை? வர்த்தக கண்காட்சியின் போது, விற்கப்படும் தலா ஒவ்வொரு நுழைவு சீட்டுக்கும் 12 வீத வரி செலுத்துகிறோம்.

அது மட்டுமன்றி காட்சி கூடத்திற்கு வரி செலுத்துகிறோம், கழிவகற்றலுக்கு பணம் செலுத்துகிறோம், கண்காட்சி வளாகத்தை சுற்றி கட்டப்படும் கொடிகள் முதற்கொண்டு சிறிய விளம்பர பதாகைகள் வரை அனைத்திற்கும் மாநகர சபைக்கு பணம் செலுத்தியே நாம் கண்காட்சியை நடத்துகிறோம். அதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்டகாட்சியில், 250 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள பெரிய நிறுவனங்கள் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தர தொழில் முயற்சியாளர் வரைக்கும் அனைவருக்கும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம். இம்முறை நுழைவு சீட்டாக 100 ரூபாய் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் வருகை தந்தால் அவர்களை இலவசமாக அனுமதிக்கவுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026