எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை - வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு!

Jaffna Sri Lanka Tamil National Alliance Viswalingam Manivannan
By Kalaimathy Jan 04, 2023 06:49 AM GMT
Report

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 

யாழ். மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், விடுக்கப்பட்ட இந்த அழைப்பை தாம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

மணிவண்ணனின் எதேச்சதிகாரம்

எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை - வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு! | Jaffna Municipal Council Northern Governor Tna Sl

இதனையடுத்து யாழ். மாநகர சபையில் இக்கட்டான நிலையொன்று தோன்றியிருந்தது. இந்நிலையில், மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ள அதே நேரம் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றால் நீதிமன்றத்தை நாடி அதனைத் தடுப்போம் என்று முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உறுப்பினர்களிடையே சமரச முயற்சியொன்றை மேற்கொண்டு, சபையின் எஞ்சிய காலத்தைக் கொண்டு நடத்தத்தக்கதான திட்டமொன்றினை முன்வைப்பதற்கு ஆளுநர் திட்டமிட்டிருப்பதனால், முன்னாள் முதல்வரின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காமல், மீண்டும் சமரசத்துக்கு முனையும் ஆளுநரின் போக்குக்குச் சம்மதிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நிராகரித்த கூட்டமைப்பு

எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை - வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு! | Jaffna Municipal Council Northern Governor Tna Sl

இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயக முறையில் - மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை ஒன்றைக் கலைக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு இல்லை. குறித்த சபை மீது அல்லது அதன் தவிசாளர் மீது முறைகேடு அல்லது மோசடிக்காக ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்று அந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சபையைக் கலைக்கும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சருக்கு உண்டு.

பாதீடு மீதான வாக்கெடுப்பு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால் தவிசாளர் பதவி விலகியதாகக் கருதப்பட்டு புதிய முதல்வரைத் தெரிவு செய்யும் பொறுப்பு உள்ளூராட்சி ஆணையாளருக்கு உண்டு.

புதிய முதல்வரை தெரிவு செய்யும் பொறுப்பு

எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை - வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு! | Jaffna Municipal Council Northern Governor Tna Sl

யாழ். மாநகர சபை விடயத்தில் தன்னால் சபையைக் கொண்டு நடத்த முடியாத நிலையில் தன் இயலாமை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகி சட்டத்தை சவாலுக்குட்படுத்திய ஒருவருக்காக, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்துக்குப் புறம்பாக முதல்வர் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக உரிமை மீறலாகும்.

அதை விட அத்தகையதொரு முதல்வரோடு சமரசம் பேசச் செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எம்மை அழைத்து சமரசம் செய்ய முனையும் ஆளுநரின் முயற்சிக்கு நாம் துணைபோகத் தயாரில்லை.

கட்சித் தலைமையின் முடிவே எமது முடிவு

எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை - வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு! | Jaffna Municipal Council Northern Governor Tna Sl

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை இது குறித்து எமக்கு எந்த விதமான அறிவுறுத்தலையும் இதுவரை வழங்கவில்லை. கட்சித் தலைமையின் முடிவுக்கமைய நாம் நடந்து கொள்வோம்.

ஆயினும் கட்சித் தலைமை ஆளுநர் அலுவலகக் கூட்டத்துக்குச் செல்லுமாறு பணிக்காமல் நாம் ஆளுநரின் செயலாளரினால் அழைக்கப்பட்ட கூட்டத்துக்குச் செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.    

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025