வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கோவில் கும்பாபிஷேக தினம்
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Thulsi
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினம் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.
கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் மாலை ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு, காலை ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடைபெற்றன.
ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா
அத்துடன் மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்களால் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மாலை வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 17 மணி நேரம் முன்
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்