வரலாறுகளும், தொன்மைமிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை - பரமு புஷ்பரட்னம்

Jaffna Nallur Kandaswamy Kovil Srilankan Tamil News
By Kathirpriya Jul 17, 2023 07:48 AM GMT
Report

"ஒரு இனத்தின் இருப்பும், அதன் பெருமையும், அடையாளங்களும், வரலாற்றுச் சான்றுகளும் வெளிக்கொணரப்பட்டு நிகழ்கால சந்ததியினரின் வாழ்வை செழுமைப்படுத்துவதோடு நின்று விடாது எதிர்கால சந்ததியினருக்கான வாழ்வியல் ஆதாரங்களையும் தொல்லியல் வழங்க வேண்டும்" என்று யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவரும் பேராசிரியருமான பரமு புஷ்பரட்னம் தெரிவித்தார்.

நேற்றைய தினம்(16) இடம்பெற்ற நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழாவின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

வரலாற்று எச்சங்கள்

வரலாறுகளும், தொன்மைமிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை - பரமு புஷ்பரட்னம் | Jaffna Nallur Sangili Thoppu Paramu Pushparatnam 

இது தொடர்பில் மேலும் அவர் உரையாற்றுகையில்“ சிறு வயதில் தோன்றிய ஆர்வம் பதின்ம வயதை எட்டையில் இலக்காக மாறி இன்று என்னை தொல்லியலாளராக வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது என்று கூறி பேச ஆரம்பித்தார்.

கடந்த கால வரலாற்று எச்சங்களே இன்றைய எங்கள் வாழ்க்கை முறையினை நிர்வகித்துக்கொண்டு இருக்கிறது. இன்றிலிருந்து ஏறக்குறைய 5000 ஆண்டுகளிற்கு முன்னர் நிலவிய நாகரிகங்கள், இன்று அந்த நாகரிகம் தழுவிய மக்களின் வாழ்க்கை முறையில் செல்வாக்குச் செலுத்துவதை எங்களால் காண முடிகின்றது.

சிந்து வெளி நாகரிகம்

வரலாறுகளும், தொன்மைமிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை - பரமு புஷ்பரட்னம் | Jaffna Nallur Sangili Thoppu Paramu Pushparatnam 

''எங்கள் கலாசாரத்தின் தொட்டிலான சிந்து வெளி நாகரிகம் நிலவிய பிரதேசங்களின் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததாக இருக்கின்ற போதிலும், அதற்கான முறையான சான்றுகளை எங்களால் பெற முடியாமல் இருப்பது இன்றைய எங்கள் வாழ்க்கை முறை பிறழ்வுக்கு ஓர் முக்கிய காரணம் என்பதை எம்மால் மறுக்க முடியாது.

இல்லையேல் அவை இன்னும் முறையாக வெளிக்கொணரப்படவில்லை என்று கூட கூறலாம்.

மனிதனின் மரபணு வாயிலாக அவன் பரம்பரை இயல்புகள் பேணப்படுவதைப் போலவே, நம் வரலாற்று சான்றுகளே நம் எதிர்கால வாழ்வைப் பேணும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

புதைந்து கிடக்கும் வரலாறுகள்

வரலாறுகளும், தொன்மைமிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை - பரமு புஷ்பரட்னம் | Jaffna Nallur Sangili Thoppu Paramu Pushparatnam 

நிகழ்காலம் கடந்த காலத்தின் நீட்சியாகவும், எதிர்காலம் நிகழ்காலத்தின் நீட்சியாகவும் இருக்கும் விதத்தில், தொல்லியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் எப்போதும் பொருத்தமான விதத்தில் செயலாற்ற வேண்டும்.

இன்றைய நிகழ்வு, அதனை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றது என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம், எங்கு செல்கிறோம் இது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை தேடுவோருக்கு விடையளிப்பதற்கான பிள்ளையார் சுழியாக இந்த நிகழ்வை நான் பார்க்கின்றேன்'' என்றும் அவர் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாமல் புதைந்து கிடைக்கும் நம் வரலாறுகளும் அதன் தொன்மை மிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். நம் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தப்பட வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்று கூடி செயலாற்ற வேண்டும் எனவும் அவர் உரையாற்றினார்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025