குடிநீரும் கழிப்பறையும் குற்றப்பொருளா... பலாலி மக்களின் கேள்வி

Jaffna Sonnalum Kuttram Tamil
By Theepan Jul 20, 2026 12:01 PM GMT
Report

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி. வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசலக் கூடத்தை பலாலி காவல்துறை அகற்றிய சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காவல்துறை தெரிவித்துள்ளபடி, குறித்த வசதிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டம் தனது கடமையைச் செய்வது அவசியமானதே.

ஆனால், எந்த நடவடிக்கையும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனிதாபிமான அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் அதே அளவு முக்கியமானதாகும்.

இது குறித்து தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்குக்காக வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி காவல்துறை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

அதேவேளை குறித்த இடத்தில் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து , சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பலாலி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலா தளங்களில் பொதுச் சுகாதார வசதிகளைஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. 

இந்நிலையிலேயே பலாலி பொது நோக்கு மண்டபம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். 

அதேவேளை , கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடாத்தினர்.

எதிர்வரும் ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அப்பகுதியில் கொட்டகை அமைக்க காவல்துறையினர் தடை விதித்துள்ள நிலையில் , போராட்டக்காரர்கள் , குறித்த பொது நோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதுடன் , மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து உட்கொள்வதுடன் , அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும் , தற்காலிக மலசல கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதனாலேயே பலாலி காவல்துறை அவற்றை அங்கிருந்து அகற்றியதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

வயோதிப பெண்கள் , முதியவர்கள் என போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் ,அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி காவல்துறையினர் எடுத்து சென்றமை அப்பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல்

வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல்

அடையாளங்களை அழிக்க முற்படும் சந்திரசேகர் எம்.பி! கடற்றொழில் சமூகத்தின் பகிரங்க குற்றச்சாட்டு

அடையாளங்களை அழிக்க முற்படும் சந்திரசேகர் எம்.பி! கடற்றொழில் சமூகத்தின் பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026