யாழில் போதை பொருட்களுடன் சிக்கிய இளைஞர்
யாழில் (Jaffna) ஐஸ் போதை பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழுப்பு பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதை மாத்திரைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் நீண்ட நாட்களாக போதை பாவனையில் ஈடுபட்ட வந்த நிலையில் ஐஸ் பாவனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 3600 மில்லிகிராம் ஐஸ் போதை மாத்திரைகள் மற்றும் அதனைப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட இளைஞரையும் மற்றும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
