யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரியின் முறையற்ற செயல்
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இளைஞன் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் தலைக்கவசம் இன்றி வீதியில் செல்லும் போது அவரை மறித்து இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுவிட்டு அவரை அனுப்பியதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மக்கள் வேண்டுகோள்
மேலும் இலஞ்சம் பெற்றுவிட்டு ஒரு தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் மனக் கசப்புக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவரின் செயற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால, யாழ். மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜயமஹா, வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
