தேர்தலில் கஜேந்திரனின் ஆதரவு யாருக்கு: சித்தார்த்தன் எம்.பி கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (Selvarajah Kajendran) எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களைக் கோருவது யாரோ ஒரு சிறிலங்கா அதிபர் வேட்பாளரை வெல்ல வைக்கும் நோக்கமே என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்(Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
யாழ்.சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ் மக்கள் ஒவ்வொரு தடவையும் சிறிலங்கா அதிபர் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கி வந்த நிலையில் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிலைநாட்டப்படவில்லை.
அதன் காரணமாகவே இம் முறை தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்த பயணிக்கும் ஐந்து கட்சிகள் சேர்ந்து கொள்கையளவில் முடிவெடுத்தன. சக தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடி ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை நாம் ஆதரிப்போம்." என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |