யாழில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Jaffna Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Jan 03, 2024 07:40 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது

இந்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இந்த வழக்கு விசாரணை குறித்து மேலும் தெரியவருவதாவது,

அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! வெளியாகியது விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! வெளியாகியது விசேட சுற்றறிக்கை


சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் இன் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதில் குறித்த இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Jaffna Prison Death Court Investigation

மேலும் இந்த வழக்குடன் தொடர்புபட்ட 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதன் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார்.

தவிரவும் இரண்டாவது சாட்சியாக ஐந்து காவல்துறையினரால் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், ஐந்தாவது சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்! ரணிலிடம் கையளிக்கப்படவுள்ள மகஜர் (படங்கள்)

யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்! ரணிலிடம் கையளிக்கப்படவுள்ள மகஜர் (படங்கள்)

இறுதியான தீர்ப்பு

மேலும் குறித்த குற்றத்தில் காவல்துறையினர் சம்மந்தப்பட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை காவல்துறைமா அதிபருக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் நீதிபதி தெரிவித்தார்.

யாழில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Jaffna Prison Death Court Investigation

தவிரவும் வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தரப்பரிசோதனையில் அதிக எண்ணிக்கையான மருந்துகள் தோல்வி!

தரப்பரிசோதனையில் அதிக எண்ணிக்கையான மருந்துகள் தோல்வி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024