சிறிலங்கா படையே வெளியேறு - வடக்கு கிழக்கு எமது நிலம் - சற்று முன்னர் ஆரம்பமானது மாபெரும் கண்டன போராட்டம்!

Jaffna University of Jaffna Sri Lanka SL Protest
By Kalaimathy Nov 02, 2022 05:36 AM GMT
Report

யாழ். வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பிலுள்ள ஆயிரத்து 600 ஏக்கர் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழைச் சந்தியில் இந்த மாபெரும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கோட்டாபய வெளியிட்ட வர்த்தமானி

சிறிலங்கா படையே வெளியேறு - வடக்கு கிழக்கு எமது நிலம் - சற்று முன்னர் ஆரம்பமானது மாபெரும் கண்டன போராட்டம்! | Jaffna Protest Tellipalai Tamil Peoples Army

வலிகாமம் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் வசமிருந்த 6 ஆயிரத்து 384 ஏக்கர் காணியை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் வர்த்தமானி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து வழக்குத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்த காணிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டன.

காணி சுவீகரிப்பிற்கான கடிதம்

சிறிலங்கா படையே வெளியேறு - வடக்கு கிழக்கு எமது நிலம் - சற்று முன்னர் ஆரம்பமானது மாபெரும் கண்டன போராட்டம்! | Jaffna Protest Tellipalai Tamil Peoples Army

இருப்பினும் இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இவ்வாறு உள்ள காணிகளில் ஆயிரத்து 600 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சால், வலிகாமம் வடக்கு பிரதேச செயலருக்கு செப்டெம்பர் மாதம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.


அந்தக் கடிதத்துக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்க நில அளவைத் திணைக்களத்துக்குப் பிரதேச செயலர் பாரப்படுத்தியிருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது.

சிவில் அமைப்புக்களின் பங்கு பற்றுதல்

சிறிலங்கா படையே வெளியேறு - வடக்கு கிழக்கு எமது நிலம் - சற்று முன்னர் ஆரம்பமானது மாபெரும் கண்டன போராட்டம்! | Jaffna Protest Tellipalai Tamil Peoples Army

சிவில் அமைப்புக்களையும், அரசியல் கட்சிகளையும் இதில் பங்கெடுக்குமாறும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டனர். அதற்கமைய இந்த போராட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாபெரும் போராட்ட பேரணி தற்போது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025