யாழில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி - பார்க்கப் படையெடுக்கும் மக்கள்!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Kalaimathy
நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திர ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
இந்த விசித்திர ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு விவசாயி வீட்டிற்கு மக்கள் படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்கு பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
விசித்திர ஆட்டுக்குட்டி
நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடே இவ்வாறு விசித்திர குட்டி ஒன்றை பிரசவித்துள்ளது.
விவசாயியின் வீட்டில் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு நெற்றியில் இரண்டு கண்களும் ஒன்றான நிலையில் காணப்படுகின்றன.
பார்வையிடும் மக்கள்
டிசம்பர் 29 ஆம் திகதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.