அநுராதபுரம் - வவுனியா தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்: வெளியான காரணம்
ஐந்து மாத காலங்களுக்கு அநுராதபுரம் (Anuradhapura) - வவுனியா (Vavuniya) வரையிலான தொடருந்து சேவைகளை முற்றாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டம் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிப்பதற்காக, தொடருந்து திணைக்களம் விசேட பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.
தொடருந்து சேவை
அத்துடன், இக்காலப் பகுதியில் வடக்குக்கான தொடருந்து சேவை அநுராதபுரம் வரை வழமை போன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அபிவிருத்திப் பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொண்டால், எதிர்வரும் காலங்களில் சிறந்த தொடருந்து சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்