அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி! யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கம் கோரல்

Sonnalum Kuttram
By Dharu Sep 01, 2026 01:37 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறித்து வடக்கு ஊடவியளாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம் செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு வெளிப்படுத்தியமை,ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.

12 ஆம் திகதிக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைது : அவரே வெளியிட்ட தகவல்

12 ஆம் திகதிக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைது : அவரே வெளியிட்ட தகவல்

சுயாதீனமாக செயற்படும் நிலை

இந்த விடயத்தை எமது ஊடகம் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனை தொடர்புகொண்டு கேட்ட நிலையில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். மேலும் தான் கடிதம் மூலம் விளக்கத்தை வழங்கியுள்ளதாக எமக்கு சுட்டிகாட்டினார்.

இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை  காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செய்தி அறிக்கையிடலை மேற்கோள்வதற்கு உரிமையை கொண்டுள்ளபோதும் மாற்றம் என கூறி மார்தட்டி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கடந்த அரசாங்க காலங்களை விட மிக மோசமான முறையில் குறித்த ஊடகவியலாளர் பணி செய்யும் ஊடக நிறுவனத்திற்கு முறையிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதன் மூலம் ஊடக சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அது தொடர்பாக பகிரங்கமாக எச்சரிக்கை விடும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு எல்லை மீறியுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர

ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016