சுன்னாகம் வாள்வெட்டு சம்பவம் - ஜெகன் உட்பட மூவர் சரண்
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்று முன்தினம் நடந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து ஆகிய சந்தேகநபர்களே சரணடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் நால்வர் தேடப்பட்டு வருகின்றனர்.
கைது நடவடிக்கை

இந்த சம்பவத்தில் பல்வேறு குற்ற செயல்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களே தொடர்புபட்டவர்கள் எனவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்று முன்தினம் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
அவர்களில் விக்டர் எனப்படும் இளைஞன் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
