இராணுவத்தின் அடக்குமுறை தந்திரங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக மாறியுள்ளது - சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் கையாண்ட அடக்குமுறை தந்திரங்கள் தற்போது சிங்கள மக்கள் மீது முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து அவர்,
நாட்டின் ஜனநாயக போராட்டங்களை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பது குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.
மாணவர்களை தாக்குகின்ற சம்பவம்
நாட்டின் இராணுவ வீரார்கள் தடிகளை சட்டையின் பின்புறம் மறைத்து வைத்து களனி பல்கலைகழக மாணவர்களை தாக்குகின்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அதற்கு இராணுவம் "குறித்த விடயத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல" என தெரிவித்துள்ளனர்.
இது எங்களுக்கு புதிதான விடயம் அல்ல. 2011ஆம் ஆண்டு அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இதே போன்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறான விடயங்களுக்கு நாம் சரியான எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும்.
சர்வதேசம் நடவடிக்கை
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனான செயற்பாடு காரணமாகத்தான் இராணுவ தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கெதிராக சர்வதேசம் நடவடிக்கை எடுத்துள்ளது." என தெரிவித்தார்.
இதன் போது ஊடகவியலாளர்களால் கேள்விகளும் எழுப்பப்பட்டன
"கேள்வி - நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் காட்சிகள் ஒன்றிணைந்து செயற்படப்போவதாக நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதன் உண்மை தன்மை குறித்து விளக்க முடியுமா?
பதில் - அப்படியொரு விசேஷமான கலந்துரையாடல் நடைபெற்றதா என்பது எனக்கு தெரியாது.
எங்கள் கட்சி உறுப்பினர்களோடு இடம்பெற்றதோ எனக்கு தெரியவில்லை.
ஆனால் பொதுவாக நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும்.அப்படி நடந்தால் அது நல்லதோர் விடயமாகும்.அதை நாங்கள் வலுப்படுத்த வேண்டும்." என தெரிவித்தார்
