தரமுயரவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை : அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு
யாழ். போதனா வைத்தியசாலையை (Jaffna Teaching Hospital) தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவது தொடர்பாக சிறிலங்கா அமைச்சரவையில் (Sri Lanka Cabinet) முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (27) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவினை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வழிமொழிந்துள்ளார்.
இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்திசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளது.
மருத்துவ பீடத்துக்கான கட்டிடம் திறப்பு
கடந்த 24 ஆம் திகதி யாழில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி அதிபர் ரணிலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது யாழ் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக அதிபரால் உறுதி மொழி வழங்கப்பட்டது.
அதிபர் கேட்டுக்கொண்டார்
இதேவேளை டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விடயத்தை கூறி அடுத்துவரும் அமைச்சரவையில் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |