யாழ். போதனா சுகாதார தொண்டர்கள் நான்காவது நாளாகவும் போராட்டம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது.
சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடம்
இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனிதவளத் தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரச சுகாதார முகாமைத்துவ உதவிச் சேவையின் தரம் III க்கான 237 பேரைக் கொண்ட இரண்டாவது குழுவினரை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதோடு, இதன் மூலம் சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள மருத்துவமனைகள், நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்