யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இன்று (21) இடம்பெற்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு உயிர்நீத்த சாரதி வை. சன்முகலிங்கம் அவர்களின் நினைவாக நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




