பணிப்புறக்கணிப்பில் குதித்த யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் உத்தியோகத்தர்களே இன்றைய தினம் (01) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
சம்பள உயர்வு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தற்போது பொறுப்பெடுக்க வேண்டிய பிறிதொரு நிறுவனம் உடனடியாக தம்மை பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிகிச்சை வழங்குவதில் நெருக்கடி
இந்தநிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் போராட்டம் காரணமாக, வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் , நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்வதனால், நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
