யாழ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு உதவ முன்வந்த சுவிஸ் குடும்பம்
புலம்பெயர் தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளருமான பாஸ்கரன் கந்தையா அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று சுவிட்சலாந்து வாழ் குடும்பம் ஒன்று இன்றைய தினம் ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்கு வழங்கியுள்ளது.
புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுமுகம் பொன்னம்மா (ஆசிரியை) அவர்களின் ஞாபகார்த்தமாக சுவிட்சலாந்தில் வாழும் அவர்களுடைய பிள்ளைகள் 10 இலட்சம் ருபாய் பெறுமதியான 8 தையல் இயந்திரங்களை யாழ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வழங்குமாறு பாஸ்கரன் கந்தையா அவர்களிடம் இன்றைய தினம் ஒப்படைத்திருந்தார்கள்.
'யாழ். தொழில்நுட்பக் கல்லூரியை புலம்யெர் மக்கள் தமது உதவிகளால் தாங்கி எமது அடுத்த தலைமுறையினரின் அறிவு விருத்திக்கு உதவ முன்வரவேண்டும்' என்று திரு.பாஸ்கரன் கந்தையா விடுத்திருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, யாழ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு உதவுவதற்கு பலர் முன்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/fca8958b-b920-4450-a5a8-46dafd115bdf/23-64c76c19bdac7.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/fa7afe3c-ef8a-4130-bae6-fbfa2a97eb35/23-64c76c1a4d4b1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/745680bf-0d13-4e7d-85f4-9cba85c313c8/23-64c76c1ace4c5.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)