நாடுகளைக் குறிவைக்கும் அமெரிக்கா! தயார் நிலையில் இராணுவம்!!
அமெரிக்கா பற்றியோ அல்லது அமெரிக்காவின் கடந்த கால வரலாறு பற்றியோ அறிந்தவர்கள், அமெரிக்கா எப்படி ஒரு ‘கிரேட்’ அமெரிக்காவாக மாறியது என்கின்ற உண்மையையும் நிச்சயம் அறிந்துவைத்திருப்பார்கள்.
இன்று அமெரிக்கா ஒரு மிகப் பெரிய தேசமாக இருக்கின்றது என்றால், அமெரிக்கா என்கின்ற நாடு ஒரு வல்லரசு நாடாக, ஒரு ‘கிரேட்’ அமெரிக்காவாக இன்று இருந்துகொண்டிருக்கின்றது என்றால், அதற்கு தேசங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்ட அதனது செயல்தான் பிரதான காரணம்.
நாடுகளையும், தேசங்களையும் விலைக்குவாங்கியோ, இராணுவ ரீதியாக ஆக்கிரமித்தோ தன்னுடன் இணைத்துக்கொண்டுதான் அமெரிக்கா என்கின்ற தேசம் இன்று ஒரு வல்லரசாக தன்னை உருமாற்றி வைத்திருக்கின்றது.
'அமெரிக்காவை மறுபடியும் வல்லமை பொருந்திய ஒரு பிரமாண்ட தேசமாக உருவாக்குவது' என்ற தொனிப்பொருளில் தனது ஆட்சியை நடாத்தத் துணிந்துள்ள டொனால்ட் ட்ரம்ப், உலகிலுள்ள பல தேசங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ள அந்த ஆபத்துப் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: