யாழ் தொழில்நுட்ப கல்லூரியில் வாட்ஸ்அப் மூலம் பணம் சேகரிப்பு: வெடித்த சர்ச்சை
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள ICT வாய்மொழி மூலப் பரீட்சைக்காக (Viva), கொழும்பிலிருந்து வரும் அதிகாரிகளின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக மாணவர்களிடம் வாட்ஸ்அப் ஊடாக பணம் வசூலிக்கப்படுவதாகப் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த தொழில்நுட்பக் கல்லூரியில் எதிர்வரும் 12 ஆம் மற்றும்13 ஆம் திகதி திகதிகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான வாய்மொழி மூல பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
நிதி சேகரிப்பு
இதற்காக கொழும்பிலிருந்து வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக நிதி சேகரிப்பு, விரிவுரையாளர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இடம்பெறுவதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நடாத்துவதற்கு வரும் உத்தியோத்தர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் போக்குவரத்து என்பவற்றை வழங்குகின்ற போதும் மாணவர்களிடம் பணத்தை கேட்பது எவ்விதத்தில் நியாயம் என மாணவர்கள் கேள்வியெழுப்பியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தொழில் நுட்பக் கல்லூரியில் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான விடயம் ஒன்று whatsapp ஊடாக இடம்பெறுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் மாணவர்கள் வரும் நிதி வழங்க வேண்டிய தேவை இல்லை என அறிவுறுத்தல் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம், பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமர சூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 41 நிமிடங்கள் முன்