யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் - அநுராதபுரம் இடையிலான யாழ்ராணி தொடருந்து சேவை இன்று (22) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று முதல் காங்கேசன்துறையிலிருந்து அநுராதரபும் வரை தினமும் தொடருந்து சேவைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையை வந்தடையும்
காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ்ராணி தொடருந்து முற்பகல் 10.17 மணிக்கு அநுராதபுரத்தை அடையும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் பிற்பகல் 2.30 மணிக்கு அநுராதபுரத்திலிருந்து புறப்படும் தொடருந்து மாலை 6.53 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் இன்று மீணடும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
