யாழ் - கொழும்பு தொடருந்து மார்க்கம் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பில்(Colombo) இருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதி திட்டமிட்டபடி மீண்டும் திறக்கப்படாது தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தொடருந்து பாதையானது நாளை(21) திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு குறித்த மார்க்கத்தினூடாக தொடருந்து சேவையை முன்னெடுக்க முடியாது என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று(20.10.2024) தெரிவித்துள்ளனர்.
வடக்கு தொடருந்து மார்க்கம்
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாகக் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது தொடருந்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்கக்கூடிய வகையில் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தினூடாக தொடருந்து சேவையை முன்னெடுக்க முடியாது என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |