செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பான சட்ட நடவடிக்கையினை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Ratnayake) தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவு தொடர்பான அறிக்கைகளை கையளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் உரிய அறிக்கைகளை வழங்கியிருந்தனர்.
இருப்பினும், பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன (Sarath Keerratna) மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (P. Ariyanethiran) ஆகியோர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |