யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்
Jaffna
University of Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ். பல்கலைக்கழக புகுமுக மாணவி ஒருவர் மீது அசிட் வீசப் போவதாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.
நேற்று காலை 8 மணியளவில் இச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்றைய தினம் புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாகி வழிப்படுத்தல் நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று காலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனை அவதானித்த பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் சிலர், குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்த நிலையில் அசிட் போத்தல் தண்ணீர் போத்தல் என தெரியவந்தது.
எனவே மாணவர்கள் இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

