திடீரென உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி! வெளிவரும் பகீர் தகவல்கள் (படங்கள்)

Jaffna University of Jaffna Jaffna Teaching Hospital Dengue Prevalence in Sri Lanka
By Sathangani Dec 26, 2023 04:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை


தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

''கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி! வெளிவரும் பகீர் தகவல்கள் (படங்கள்) | Jaffna Uni Student Supeena Dead Sister Accusation

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி எடுத்ததால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார்.

இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் ஏற்றிவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்று எனது தங்கை துடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த ஊசி மருந்துக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

ஹமாஸின் சுரங்கத்தில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகள்

ஹமாஸின் சுரங்கத்தில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகள்


தெல்லிப்பழை வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு 

 பின்னர் மருத்துவர் வந்து "இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது தங்கச்சிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டார்.

ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக கூறினர்.

தெல்லிப்பழை வைத்தியசாலை tellippalai hospital

பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே தங்கச்சியை அனுப்பி வைத்தனர்.

இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை. முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது.

பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். இரவு எட்டு மணிக்குத்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை


ஊசியின் பெயைரைக் கூற மறுத்த வைத்தியர்   

எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர்.

பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.

திடீரென உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி! வெளிவரும் பகீர் தகவல்கள் (படங்கள்) | Jaffna Uni Student Supeena Dead Sister Accusation

பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணித்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது தங்கச்சி சென்றார்.

இதன்போதே ஏதாவது எனது தங்கச்சிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை. எனது தங்கச்சிக்கு ஏற்கனவே போட்ட ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு ஒட்டி இருந்தனர்.

பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது. ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் புதன்கிழமை பரிசோதனை செய்யவில்லை. ஏனென்றால் பரிசோதனை இயந்திரம் பழுதாகி விட்டதாக கூறினர்.

இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அறியமுடிகிறது.

தங்கைக்கு  ஏற்றப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையில் ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறான எந்த சம்பவங்களும் இனிமேல் நடக்கக்கூடாது எனது தங்கச்சிக்கு நீதி வேண்டும்'' என்றார்.

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி! மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி! மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024