யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

Jaffna University of Jaffna Sri Lanka
By Sathangani Dec 04, 2023 06:27 AM GMT
Report

யாழ். பல்கலைக்கழகத்தினுள் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று (04) நண்பகல் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தூபி தொடர்பிலேயே இந்த விசாரணகள்  மேற்கொள்ளப்படவுள்ளன.

அமெரிக்க போர்க்கப்பல் மீது திடீர் தாக்குதல்: செங்கடலில் பதற்றம்!

அமெரிக்க போர்க்கப்பல் மீது திடீர் தாக்குதல்: செங்கடலில் பதற்றம்!


முறைப்பாடு பதிவு 

பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு | Jaffna University Monument Issue Re Investigation

இம் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டதற்கான அவசியத் தன்மை குறித்தும், தூபி அமைப்பதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பிலும் விளக்கமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கடந்த மாதம் 7 ஆம் திகதி விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவன்: குவியும் பாராட்டுக்கள் (படங்கள்)

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவன்: குவியும் பாராட்டுக்கள் (படங்கள்)


தூபி அமைப்பதற்கான நிதி 

இந்த விசாரணைகளின் போது, அன்றைய நிலைமையில் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பிலும், அதற்காகப் பெறப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் பல்கலைக்கழக நிர்வாகம் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்திருந்ததுடன், தூபி அமைப்பதற்காக அரச நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தது.

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு | Jaffna University Monument Issue Re Investigation

இதனையடுத்து, தூபி அமைப்பதற்கான நிதி பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன், அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளையும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் இன்று நண்பகல் விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந் நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சிரேஷ்ட பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் இன்று நண்பகல் 1.00 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.

திருகோணமலையில் முதலை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

திருகோணமலையில் முதலை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி


மேன்முறையீடு மீதான விசாரணைகள்

இதே நேரம், தூபி அமைப்புத் தொடர்பில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்குப் பல்கலைக்கழகத் தகவல் அறியும் அதிகாரியும், மேன்முறையீட்டு அலுவலரும் வழங்கிய பதில் திருப்திகரமானதல்ல என்று தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு மீதான விசாரணைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தகவல் அறியும் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு | Jaffna University Monument Issue Re Investigation

இந்த விசாரணைகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகவல் அலுவலரும், முறைப்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், தான் முறைப்பாட்டைக் கைவாங்கிக் கொண்டுள்ளதனால், விசாரணைக்குச் சமூகமளிக்கப்பேவதில்லை என்று முறைப்பாட்டாளர்களில் ஒருவரான பேராசிரியர் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தனது முறைப்பட்டை அடிப்படையாக வைத்து தன்னைத் தமிழ் சமூகத்துக்கு எதிராகச் செயற்படும் ஒருவராகச் சித்தரிக்கும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதனால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.  

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணி: மகிழ்ச்சி செய்தியை அறிவித்த கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணி: மகிழ்ச்சி செய்தியை அறிவித்த கல்வி அமைச்சர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026