யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சர் டக்ளஸிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

student douglas devananda university of jaffna
By Vanan Sep 20, 2021 07:01 PM GMT
Report

கலாசார சுற்றுலாத் துறையை சிறப்புப் பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கடந்த வருடங்களில் யாழ். பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்த குறித்த சிறப்புக் கற்கை நெறி இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மாணவர்களுக்கும் இடையில் நேற்று(20) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாணவர் பிரதிநிதிகள், சுற்றுலாத்துறையை பொருளாதாரத்தின் முக்கிய மார்க்கமாக எமது நாடு கொண்டுள்ளமையினால் வேலைவாய்ப்புக்களை இலகுவாகப் பெறக்கூடிய இத்துறையினை சிறப்புப் பாடமாக யாழ். பல்கலைக் கழகத்தில் கற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கற்கைநெறியினை தொடர்ந்து மேற்கொள்வதற்கு, போதிய விரிவுரையாளர்கள் இல்லை எனவும், பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழவின் அனுமதி இல்லை எனவும் நிர்வாகத்தினால் கூறப்படுகின்ற காரணங்களை ஏற்க முடியாது என்றும், குறிப்பாக மூன்று நிரந்தர விரிவுரையாளர்களும், வருகைதரு விரிவுரையாளர்களும் தற்போது இருப்பதாகவும் மாணவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பேராசிரியர் புஸ்பரட்னம், தென்னிலங்கை புத்திஜீவிகள் பலரின் ஆலோசனைக்கு அமைய, எமது பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியையும் மரபுரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு இந்த பாடநெறி ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதனை தெரிவு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, கற்கை நெறிகளை நிறுத்துவதற்காக சொல்லப்படுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் சட்டப் பீடம் உருவாக்கப்பட்ட போது, போதிய விரிவுரையாளர்கள் இல்லாத நிலையிலும் ஏனைய கற்கைநெறிகளுக்கான விரிவுரையாளர்களைப் பயன்படுத்தி சட்டப் பீடத்தினை செயற்படுத்தியதனால் இப்போது வினைத் திறனான சட்டபீடம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அதேபோன்று, புதிதாக பாடநெறிகள் ஆரம்பிக்கப்படுகின்ற போது, பல்கலைககழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றிருக்க வேண்டியதில்லை எனவும், குறித்த அனுமதிக்கான படிமுறைகளை முன்னகர்த்துவதன் மூலம் காலப்போக்கில் பல்கலைககழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, யாழ் பலகலைக் கழகத்தில் இந்து பீடத்திற்கான உருவாக்கப்பட்டமை மற்றும் மற்றும் மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரியை கிழக்கு பல்கலைக் கழகத்தின் பீடமாக மாற்றியமை உட்பட பல்வேறு அனுபவங்களும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஒத்துழைப்புக்களும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவற்றை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாணவர்களின் விருப்பங்களை புரிந்து கொள்வதாகவும், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான சாதகங்கள் தொடர்பாக ஆராய்வதாகவும் உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022