யாழ் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் - வெளியான பின்னணி!
Jaffna
Sri Lanka
Sri Lanka Fisherman
Death
By Kalaimathy
யாழ்ப்பாண மாவட்ட கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மீட்கப்பட்ட இந்த சடலம் மீனவர் ஒருவருடையது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர்
சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் வயது 58 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுழிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு சென்றவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் திருவடி நிலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்