கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம்!
Jaffna
Sri Lanka
Viswalingam Manivannan
Northern Province of Sri Lanka
By Kalaimathy
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
குடும்பத்தினர் அஞ்சலி
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், மற்றும் குடும்பத்தாரும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்