யாழில் பாடசாலை நுழைவாயிலை மறித்து பெற்றோர் எதிர்ப்புப் போராட்டம்!
வரணி அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை நுழைவாயிலை மறித்து அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர் மட்டும் பாடசாலை முன் கூடி நுழைவாயிலை மறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்தனர்.
இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர் ஆர்ப்பாட்டம்

இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
இதன் போது, பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை அதிபர் ஏழு வருட நியமனத்தில் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் மூன்று வருடத்தில் திடீரென அதிபரை இடமாற்றுவதாகவும் அதனை எதிர்த்தே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் தெளிவூட்டல் அவசியம்

திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என நேற்றைய தினம் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் அதிபர் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி பெற்றோர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



