யாழில் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மதியம் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகட்டுப்பாட்டை இழந்து மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(5) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து நவாலி பகுதியை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
அவர்கள் துணவியில் உள்ள குளத்திற்கு அருகிலுள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக அருகில் உள்ள மதிலுடன் மோதி, பின்னர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
மூவர் படுகாயம்
இதன் போது அதில் பயணித்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் 18 மற்றும் 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறை, நவாலி மற்றும் நாவற்குழி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பயணித்த மூவரில் ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 

 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        