மின் கட்டண உயர்வுக்கு மொட்டு எம்.பியும் கடும் எதிர்ப்பு
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயமாக வாக்களிப்போம் எனவும், போயா தினத்தன்று பிற்பகல் மின்சாரத்தை துண்டிப்பது நல்ல முடிவு அல்ல எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
மக்களிடையே செல்ல முடியாத நிலை
அத்தியாவசிய உணவு மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் மக்களிடம் செல்ல முடியாது எனத் தெரிவித்த ஜகத் குமார, மக்களிடம் செல்வதற்கு செல்வதற்கு அவர்கள் மீதான அழுத்தங்களைக் குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மின் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசியப் பொருள்களான முட்டை, குழந்தைகள் பாடசாலை புத்தகங்கள், குறைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
பேருந்து உரிமையாளர்களின் செயல்
எரிபொருள் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்படும் போது பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முயலும் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருள் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க மாட்டார்கள் எனவும் இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
