வெளிநாடொன்றில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை
அவுஸ்திரேலியா (Australia) - மெல்பேர்னில் (Melbourne) உள்ள வைத்தியரான இலங்கையர் ஒருவருக்கு 10 வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், 52 வயதான தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்க (Mr. Pradeep Dissanayake) என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 52 வயதான பிரதீப் திசாநாயக்கவுக்கு 10 வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத அடிப்படை
கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பிய நிலையில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பிரசங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரதீப் திசாநாயக்க ஐந்து தடவைகள் ஒரு சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும், 16 வயதுக்குட்பட்ட மற்றொரு சிறுமியை இரண்டு முறை தகாதமுறைக்கு உட்படுத்தியமதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதீப் திஸாநாயக்க அனைத்து குற்றங்களையும் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |