இலங்கையின் அரசியல் அதிர்ச்சி நிலை : இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு
இரண்டு வருடங்களின் முன்னர் இலங்கை எதிர்கொண்ட அரசியல் அதிர்ச்சி நிலைக்கு உள்நாட்டு வெளிநாட்டு காரணிகளே காரணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார்.
உலகபொருளாதாரம் இன்று பலவீனமான நிலையில் உள்ளது, கடந்த ஐந்து வருடங்களில் மிக மோசமான நிலையை எதிர்கொண்ட உலகின் பல பகுதிகளிற்கு அவர் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடுகளில் வாழ்க்கை தர வீழ்ச்சியை மக்கள் எதிர்கொண்டுள்ளனர் நான் இலங்கையை இங்கு குறிப்பிடலாம்.
அரசியல் மாற்றம்
நான் அந்த நாட்டிற்கு சென்றிருக்கின்றேன் நான் அங்கு அடிக்கடி செல்கின்றேன் அங்கு இடம்பெற்ற அரசியல் மாற்றங்களிற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் எதிர்கொண்ட அரசியல் அதிர்ச்சியே.
அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட சில காரணிகளாலும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத வெளி காரணங்களாலும் அவர்கள் இந்த நிலையை அனுபவித்தனர்.
உக்ரைனில் நாங்கள் பார்க்கின்றோம் மத்திய கிழக்கில் நாங்கள் பார்க்கின்றோம் பூகோளமயப்படுத்தப்பட்ட உலகில் பதற்றங்களும் மோதல்களும் உலகின் ஏனைய பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தப்போகின்றன.
ஒரு பிராந்தியத்தில் இல்லை எல்லாபக்கத்திலிருந்து அனைவருக்கும் இவை ஏதோ ஒரு வடிவத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |