ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாமலின் எக்ஸ் தள பதிவு
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal rajapaksa)இரங்கல் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவரது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து நான் மிகவும் கவலையளிக்கிறது.
பயங்கரவாத தாக்குதல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல்களையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். இந்திய மக்களுடன் இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் நிற்கிறோம்.
Deeply saddened by the brutal terror attack in Pahalgam, J&K. My thoughts are with the victims' families, and I pray for the swift recovery of the injured. We stand with the people and Government of India. As a region, we must unite and step up our efforts to counter terrorism…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 23, 2025
நாம் ஒரு ஐக்கியமாக இணைந்து தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முயற்சிப்போம்” எனப் அவர் பதிவிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறி வருகின்ற ஜம்மு-காஷ்மீர் சம்பவம் தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
