ஜப்பானில் திடீரென மீண்டும் நிலநடுக்கம்!
Japan
people
Earthquake
By Thavathevan
ஜப்பானின் வடகிழக்கு மாகணம் ஐவாட்டில் திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.25 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. ஆயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரைப்பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்திருக்கின்றன, இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த புதன் கிழமை ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 03 பேர் உயிரிழந்துள்ளமையும், 180 இற்கும் மேற்பட்டோர் காயமைடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி