நெகிழ் வட்டு போரில் இறுதியாக வென்ற ஜப்பான்
இறுதியாக ஜப்பான் நெகிழ் வட்டு (Flopy Disk) பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
ஜப்பான் (Jappan) தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் முன்னேற்றங்களை கண்டிருந்தாலும், இன்று வரையில் அந்நாட்டின் அரச பணிகளுக்கு நெகிழ் வட்டுகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்தவகையில், மக்களின் ஆவணங்களை நெகிழ் வட்டுக்கள் ஊடாகவே வழங்க வேண்டும் என்பது அந்நாட்டில் பல வருடங்களாக இருந்துவந்த சட்டமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பல திருத்தங்கள்
இந்த சட்டத்தை நீக்குவதற்குப் பல திருத்தங்கள் தேவைப்பட்டதன் காரணமாக, உடனடியாக மாற்ற முடியாத நிலைமை இருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும், அந்நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் டாரோ கோனோ (Taro Kono) , 2021ஆம் ஆண்டு இந்த நடைமுறையை மாற்றும் வகையில், 'நெகிழ் வட்டுகளுக்கு எதிரான யுத்தம்' (War on floppy disks) என்ற விடயத்தை அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று (04) அந்நாட்டில் நெகிழ் வட்டு பாவனை முற்றாக நீக்கப்பட்டதாக அமைச்சர் டாரோ கான் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |