இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவுள்ள ஜப்பான்
இலங்கையில் (Sri Lanka) மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை ஜப்பான் (Japan)அரசாங்கம் விடுவிக்கவுள்ளது.
ஜப்பான் அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அலி சப்ரி தமது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள்
The Japanese government officially announces the release of funds for resuming projects undertaken in Sri Lanka-
— M U M Ali Sabry (@alisabrypc) July 24, 2024
இதேவேளை அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) கடந்த காலத்தில் இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |